Friday, December 7, 2007

புதிய ஜெயா சேனல்கள்

வணக்கம் எபபிடி இருக்கிங்க

ஜெயா டிவி நேற்று இரண்டு 24 மணி நேர சேவை டிவி ஐ தொடங்கியது ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மாக்ஸ் என்பது அதன் பெயராகும்அரசியல் சாயம் இல்லாமல் நிகழ்ச்சியை வழங்கினால் சரி தான்

Tuesday, November 20, 2007

தமீழ்

Dear All
Just a try......pls forgive for the spelling mistake...i am not able to type some lettersexample thu , mu ro...etc
if any one know pls help...


என் இனிய தமீழ் அன்பர்கேள
தமீழ படிப்ேபாறக்கும பதிப்ேபாறக்கும வணக்கம்
இது என் தமீழ அர்வத்ததால வைரகிேறன்
தவறூக்கு மன்னிக்கவும்


Priyamudan
Muthu

Friday, April 20, 2007

<------" Kiskintha Photos "---->



Dudes

This is the photo which was taken @ Kiskintha.hope you remember thease guys-->Muthu,VP,Dilli,Vijesh

Just want to share

Regards
Muthu

Thursday, March 15, 2007

இப்படிச் சொன்னார்கள் ( padithathil pudithathu )

இப்படிச் சொன்னார்கள்


உலகச் சந்தையில் அதிகமாய் போனால் 5 கம்யூட்டர்களை விற்கலாம்"- IBM-ன் சேர்மேன் தாமஸ் வாட்சன் 1943-ல்.

"640K யாருக்கும் போதுமானது"- 1981-ல் பில்கேட்ஸ்"


பார்க்கப்போனால் எல்லா கணிணியிலும் மனிதன் தான் இன்னும் ஓர் அசாத்திய கணிணி"- ஜான் எப் கென்னடி"

எதற்காக தனி ஒருவருக்கு அவர் வீட்டில் கணிணி தேவைப்படும் என புரியவில்லை"- 1977-ல் Digital Equipment Corp தலைவர் கென்னெத் எச் ஆல்சன்"

எதிற்கால கணிணிகளின் எடையானது குறைந்தது ஒன்றரை டன்னாவது இருக்கும்"-1949 -ல் Popular Mechanics-ன் கணிப்பு

"உண்மை மனிதர் எவரும் பேக்அப் செய்யமாட்டார்.ஒரு பொது ftp server-யில் அப்லோட் செய்து வைப்பர்.மொத்த உலகமும் அதை இறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்"- லினக்ஸ் புகழ் லினஸ் டோர்வால்ட்ஸ்"

இந்த துறையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.அந்த கால கடிகாரம் வேகத்தில் தான் இந்த கால கடிகாரங்களும் ஓடுகின்றன"- போர்டு

"நன்கு புரோகிராம் செய்யப்பட்ட கணிணி மனிதகுணத்தை இழந்து நேர்மையாய் வேலை செய்கின்றது"- அமெரிக்க அறிவியலாளர் Isaac Asimov"

புதிதாய் மனிதனின் DNA-யில் மாற்றங்கள் செய்யாவிடில் சீக்கிரமே கணிணி ரோபாட்டுகள் உலகை ஆளத் தொடங்கிவிடும்"- பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி Stephen Hawking"

பாதுகாக்கப்பட்ட கணிணி என்றால் அதில் மின்சாரம் செருகப்பட்டிருக்க கூடாது,பத்திரமாக பூட்டு வைத்து பூட்டப்பட்டிருக்க வேண்டும்,20 அடி ஆழத்தில் ரகசிய இடம் ஒன்றில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் அது பாதுகாக்கப்பட்ட கணிணியா? தெரியாது."-Dennis Hughes, Federal Bureau of Investigation"

புதுப் புது தொழில் நுட்பங்கள் வரலாம்.காலப் போக்கில் அவை வேலை இழப்பை ஏற்ப்படுத்துகின்றன என்பதை விட புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்தே உண்மை"-முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்"

நான் நாலாபுறமும் அலைந்து திரிந்து சிறந்த அறிஞர்களிடம் நன்கு பேசிப் பார்த்து விட்டேன்.இந்த data processing சமாசாரம் ரொம்ப நாளைக்கு நீடிக்க போவதில்லை"-The editor in charge of business books for Prentice Hall, 1957"

விலை மலிவான,150 பவுண்ட்டே எடை கொண்ட, எல்லா பயன்பாட்டுக்கும் உதவும், நுட்ப விஷயங்கள் ஏதுமின்றி எளிதில் யாராலும் தயாரிக்க படக் கூடிய ஒரே கணிணி - மனிதன்"-1965-ல் NASA

"கணிணிதுறை வளர்ந்த அதே வளர்ச்சி வீதத்தில் ஆட்டோமொபைல் துறையும் வளர்ந்திருந்தால் இன்றைக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை $100 ஆகவும்,காலன் பெட்ரோலுக்கு ஒரு மில்லியன் மைல்கள் ஓடக்கூடியதாகவும்,வருடம் தோறும் நொறுங்கி,உள்ளோர் அனைவரையும் கொல்வதாயும் இருந்திருக்கும்"- ("Robert X. Cringely", Computerworld)

"எதிற்காலத்தில் ஆகாயவிமானங்கள் ஒரு விமானி மற்றும் ஒரு நாய் கொண்டு ஓட்டப்படும்.நாயின் பணியானது விமானி எதாவது விமானத்தின் பட்டன்களை தட்டினால் உடனே கடிக்க கூடியதாய் இருக்கும்"— Scott Adams (author of Dilbert).

Monday, February 26, 2007

வணக்கம் நன்பர்்கேல

வணக்கம் நன்பர்்கேல

இது் என் மூதல் தமில் பதீபூ.தவருகு மன்னிகவும்

இவன்







Tuesday, February 20, 2007

Microsoft releases SQL Server 2005 Service Pack 2

Microsoft released Service Pack 2 (SP2) for SQL Server 2005 on Tuesday, a free upgrade available for download, in addition to new virtualization licensing for the database

Microsoft said it will allow unlimited virtual instances of the SQL Server SP2 database to run on servers that are fully licensed for SQL Server 2005 Enterprise Edition.
Enterprises are exploring virtualization technology -- which allow multiple copies of an OS to run on one piece of hardware -- to reduce the number of physical servers and increase their utilization.

The free upgrade for the company's popular database product also includes better interoperability with other vendors. One SQL Server 2005 feature, called Report Builder, can build customized reports drawn on data held in Oracle products and Hyperion Solutions' Essbase database, Microsoft said.

SQL Server 2005 SP2 will be the only release of the database that Microsoft will support for its Windows Vista OS and upcoming Longhorn server, due for a final release in the second half of this year.

Other features of SP2 include:

-- Add-ins for Office 2007 programs such as Excel and Visio -- a drawing and diagramming application -- will enable data mining using SQL Server Analysis Services, the database's online analytical processing component.

-- SQL Server Reporting Services -- a tool for creating and managing reports -- is integrated with SharePoint, the company's portal building and document-sharing software.

-- New management tools include improved database maintenance, enhanced management repots and a new copy database wizard.
Microsoft also announced new management reports for SQL Server Express Edition, the free version of the database, and SQL Compact Edition, an embedded database for mobile devices such as tablet PCs and smart phones.

Thursday, February 1, 2007

அம்பானியின் கண்கள்

அம்பானியின் கண்கள்
ஓம்கார் கோஸ்வாமி

1984 -இல், இந்தியாவின் துணி தொழிற்சாலைகள் பற்றி ஆராய்ந்து சொல்ல அப்போதைய திட்டக்கமிஷனில் இருந்த நிதின் தேசாய் என்னைப் பணித்தார். இந்தியாவில் இருந்த சுமார் 50 மில்களுக்கு - அகமதாபாத், நரோடாவில் இருந்த ரிலயன்ஸ் தொழிற்சாலை உட்பட - சென்று பல நூறு நிபுணர்களைச் சந்தித்தப்பின்னர், துணி கமிஷனர் அலுவலகத்தில் இருந்த ஒரு ஆபீஸர் என்னை, இந்த துணி தொழிற்சாலைகளைப் பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டுமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். ராசிக்பாய் மெஸ்வானி என்ற திருபாய் அம்பானியின் மச்சினரோடு எனக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்தான் ரிலயன்ஸில் நம்பர் 2 ஆள். குட்டையாக, தொந்தியுடன், கத்திபோல கூர்மையான அறிவுடனும், தொற்றிக்கொள்ளும் குறுநகையுடனும், ஏராளமான புள்ளிவிவரங்களுடனும், வெள்ளை சபாரி சூட்டுகளின் மீது ஆசையுடனும் இருந்த ராசிக்பாய் என்னுடைய டெக்ஸ்டைல் குருவாக ஆகிவிட்டார். நூல் விற்பனைகள், பவர் லூம், இன்னும் இந்தத் தொழிலில் இருக்கும் ஏராளமான அரசியல்கள் எல்லாவற்றையும் எனக்குக் கற்றுத்தந்தவர் அவர்தான். ஒரு குளிர்காலத்து காலையில் 1984இல் என்னை தன்னுடைய மச்சினரை சந்திக்க அழைத்துச் சென்றார்.


அது ஒரு பெரிய ஆபீஸ் ரூம். திருபாய் அம்பானி நடந்து வந்து கை குலுக்கினார். நானும் அவரும் நேர் எதிரே உட்கார்ந்தோம் சோபாவில். முதல் 20 நிமிடங்களுக்கு, எனக்கு துணி வியாபாரம் பற்றி என்ன தெரியும் என்பதை அறிந்து கொள்வதற்கும், சில பிரச்னைகளில் என் நிலைபாடு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கும் எண்ணற்ற கேள்விகள் கேட்டார். ஒரு திருப்தியுடன், பிறகு என்னிடம் அவரது திட்டமான பின்னோக்கிய ஒருங்கிணைப்பு (backward integration) விளக்கினார். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் 1984இல் இது பற்றி பேசுகிறோம். ரிலயன்ஸ் என்பது வெறும் விமல் என்ற பிராண்ட் பெயர் கொண்ட நரோடா, படால்கங்காவில் இருக்கும் ஒரு துணி மில் மட்டுமே. கச்சா பெட்ரோல் எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை எண்ணெயாகவும் நாஃப்தாவாகவும் உடைத்து, இறுதியில் துணியாக மாற்றக்கூடிய ஒரு மாபெரும் பெட்ரோ கெமிகல் ராட்சசனை உருவாக்கும் ஒரு கனவை இங்கே ஒரு மனிதர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது கனவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அசந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.

இந்த முதல் சந்திப்பில்தான் நான் திருபாயின் கண்களைக் கவனித்தேன். அந்த கரிய, பிரகாசமான எரியும் கண்கள் உங்களை சிறைப்படுத்தி உள்ளே இருக்கும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் அந்தக் கண்களை நான் மறக்க மாட்டேன். அவரது மனத்தையும் மறக்க இயலாது. திடாரென்று, தன்னுடையை பின்னோக்கு ஒருங்கிணைப்பு திட்டத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில், திருபாய், 'அச்சா, தங்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? ' என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்கக் குவியலை உபயோகப்படுத்தி தங்க பாண்டுகளாக மாற்றி, அதன் மூலம் அடிப்படைக் கட்டுமானப் பணிகளைச் செய்வதற்கு ஒரு திட்டத்தைச் சொன்னார். 1984இல், ஒரு பெட்ரோ கெமிகல் ராட்சசனை உருவாக்கும் கனவுக்கு நடுவே, விற்று வாங்கக்கூடிய தங்க பாண்டுகளுக்கான ஒரு சந்தையைப் பற்றியும் ஒரு திட்டம் வைத்திருந்தார்.
பிறகு வந்த வருடங்களில், நான் திருபாயை பல முறை சந்தித்தேன்.

1986இல் அவருக்கு வந்த பக்கவாதத்தால், அவரது பேச்சு தடுமாறியது. ஆனால், அவரது மனத்தின் நம்பமுடியாத சக்தியையோ, அவரது கண்ணில் இருந்த பிரகாசத்தையோ அதனால் கொஞ்சமும் குறைக்க முடியவில்லை. நாங்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் இருக்கும் பற்றாக்குறை, அடிப்படைக் கட்டுமானத்துக்கு பணம் சேர்ப்பது, அரசாங்க வேலைகளில் தரம், பல மந்திரிகளைப் பற்றியும், பல தொழிலதிபர்களைப் பற்றியும் கிசுகிசு ஆக இப்படி. இவை அனைத்தும், புன்னகையாலும், சிரிப்பாலும், தொடுகையாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கெட்டவார்த்தைகளாலும் அலங்கரிக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர், ஒரு மாலையில், கடற்கரையோரம் உட்கார்ந்திருந்தபோது, திடாரென்று அவர் என்னிடம் கேட்டார். 'ஓங்கார், இந்தியாவின் மிகப்பெரிய பற்றாக்குறை என்ன ? '. வழக்கம்போல, எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே பதிலும் வந்தது, 'தண்ணீர் '. அப்புறம் முன்னைப்போல, திருபாய், கடல்தண்ணீரை நல்லநீராக்கும் தன்னுடைய மாபெரும் திட்டத்தை கூறினார். அந்த கருத்து மிகவும் எளிமையானது அதே நேரம் ஆச்சரியமானது. வெப்ப மின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையில் இருக்கும் திறமையின்மையால், தன்னுடைய பெரும் அளவு வெப்பத்தை வீணாக்குகின்றன. திருபாயின் திட்டம், இந்த காற்றில் வெளியேறி வீணாகும் சக்தியை உபயோகப்படுத்தி கடல்தண்ணீரை நல்ல நீராக மாற்றும் தொழிற்சாலைகளை கடலோரம் எங்கும் அமைப்பது. இது தண்ணீர் உற்பத்தி செய்யும் மற்ற முறைகளை காட்டிலும் மிகவும் விலை மலிவானது. 'ஆக என்ன பிரச்னை ? ' என்று கேட்டேன், 'நீங்கள் ஏன் இதனைச் செய்யக்கூடாது ? ' திருபாயின் பதில், 'சாலோங் கோ சம்ஜானா சாஹியே. ' ' உருப்படாதவர்களுக்கு (அரசாங்க அதிகாரிகளுக்கு) ப் புரியவைக்க வேண்டும் ' அரசாங்கத்தில் இருப்பவர்களின் அறிவுத்திறம் பற்றிய வெளிப்படையான கருத்து அது.

எப்போதும் பெரிய வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பான மூளையைக் கொண்ட இந்த மனிதர். மற்ற தொழிலதிபர்களின் சிந்தனைக்கும் எட்டாத பெரும் திட்டங்களை தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். அடிப்படை பணமுதலீடு, லாபம் போன்றவறரிக் கணக்கிட்டு, தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் - உடல், ஆன்மா, பணம், எல்லாவற்றையும், அந்த திட்டம் வெற்றியடைய அர்ப்பணிக்கும் தைரியம் இருந்தது. முகேஷ், அனில் என்ற இருவரின் தலைமையில் அவரது நம்பிக்குப் பாத்திரமாகவும், எல்லையற்ற திறமை கொண்டதாகவும், அவர் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பதாகவும் அவரிடம் இருந்த குழு அவருக்கு ஒரு வரப்பிரசாதம். அவரது கொள்கை வெகு எளியது. 'கர்னா ஹை, கர்கே திகானா ஹை '(செய்ய வேண்டும், செய்து காண்பிக்க வேண்டும்). இதுதான் ரிலயன்ஸ் கம்பெனியை ஓட்டுகிறது. இது மட்டுமே, ரிலயன்ஸ் கம்பெனியை பெட்ரோலியம், பெட்ரோ கெமிகல், டெலிகாம் என்ற துறைகளில் பெரும் ஆக்கிரமிப்பு செய்ய வழிவகுத்திருக்கிறது.

அதே நேரத்தில், திருபாய், சாதாரண மனித உறவுகளை வெகுவாக மதிக்கக்கூடிய நல்ல மனிதர். 1984இல், நான் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் சாதாரண துணை பேராசிரியர். அவர் ஏற்கெனவே புகழ்பெற்ற மாபெரும் தொழிலதிபர் - அது பெருமையா , சிதுமையா என்பது உங்கள் சார்பைப் பொறுத்தது.. இருப்பினும் அவர் என்னிடம் அன்புடனும், அக்கறையுடனுமே பழகினார்.

அவர் எனக்கு சவால் விட்டார். எனது சவாலையும் ஏற்றுக்கொள்ளும் மனத்துடன் இருந்தார். அவர் மேலே நான் கீழே என்பது போல என்னை உணரவைத்ததே இல்லை. அடக்கமுடியாத ஆர்வத்துடன், எதையாவது புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடனும், யாரிடமிருந்து வருகிறது என்று பார்க்காமல் கற்றுக்கொண்டார்.
பல வருடங்களுக்குப் பின்னர், முகேசும் அனிலும், பிஸினஸ் இந்தியாவின் 'பிஸினஸ்மேன் ஆஃப் த இயர் ' (அவ்வருடத்திய சிறந்த தொழில்வல்லுனர்கள்) என்று பாராட்டப்பட்டார்கள். அவரது தந்தை தன் மகன்களது பெருமையில் புல்லரித்துக்கொண்டிருந்தார். நான் முகேஷிடம் அமெரிக்காவில் சமீபத்தில் ரிலயன்ஸ் வெளியிட்டிருக்கும் 100 வருட பாண்டுகளுக்கு எப்படி பணம் கொடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். இப்படிப்பட்ட ஒரு கடனுக்கு எப்படி வியாபாரம் செய்து இதனை நியாயப்படுத்தப்போகிறீர்கள் என்று கேட்டேன். முகேஷின் பதிலை மறக்கவே மாட்டேன். 'பாஸ், ஒவ்வொரு வருடமும், எந்த வகையிலாவது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் ரிலயன்ஸிடம் தொடர்பு கொள்ளவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டும். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும். ' தன்னுடைய சிவப்பு லெதர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, திருபாய் வெகுவேகமாக தலையை ஆட்டினார். என்ன இருந்தாலும், திருபாயின் அசலான, உண்மையான ஆளுமை அது.

இதுதான் மிகப்பெரியதாக கனவு காண்பது என்பது. ஜாம்ஷெட்ஜி டாடா, கன்ஷ்யாம்தாஸ் பிர்லா, வால்சந்த் ஹிராசந்த் போன்றவர்கள் கண்ட கனவு. திருபாய் அம்பானி என்ற பெட்ரோல் பங்க் உதவியாளர் கண்ட கனவு. அத்தோடு கூட, கற்பனை, தைரியம், செய்த வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம், அப்புறம் நம்மை எப்போதும் விடாத கண்கள். நான் எப்போதும் திருபாயை மறக்க மாட்டேன். இந்தியாவும் மறக்காது.
***
அவுட்லுக் பத்திரிக்கையிலிருந்து